அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், பாஜக-வுடனான கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்று கருத்தும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கூட்டணி முறிந்ததால் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகள் பாயலாம் என்ற அண்ணாமலை மறைமுக மிரட்டலுக்கு அதிமுக அஞ்சாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க || ஆசிய விளையாட்டுப் போட்டியின் 5 பதக்கங்களை வென்ற இந்தியா!