வைரல்

ஹெல்மெட்காக வீட்டை விற்ற நபர்...ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விழிப்புணர்வு!

Tamil Selvi Selvakumar

பீகாரில் தனது வீட்டை விற்று பொதுமக்களுக்கு ஒருவர் ஹெல்மெட்டுகளை இலவசமாக வழங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

‘தலை கவசம் உயிர் கவசம்’ என்பதை மறந்து எல்லோரும் வாகனத்தில் பயணம் செய்யும் போது ஹெல்மெட் அணிவதை தவிர்த்து வருகின்றனர்.  ஹெட்மெட் அணிவதன் முக்கியதுவத்தை அறிந்தும், அதனால் ஏற்படும் விபரீதங்களை அறிந்தும் பலர் தலைகவசத்தை அணியாமல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல விபத்துகளில் பயணிகள் தங்கள் உயிரையும் இழந்து வருகின்றனர். 

இந்த உயிர் இழப்புகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதோடு, ஹெல்வேட் அணியாமல் பயணம் செய்தால்  அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருப்பினும், இன்னும் சிலர் தலைகவசம் அணியாமல் தான் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பீகாரில் ஒருவர் தலைகவசத்தின் முக்கிய துவத்தை எடுத்துரைக்கும் வகையில், 56 ஆயிரம் ஹெல்மெட்களை இலவசமாக வழங்கியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீகாரை சேர்ந்த ராகவேந்திர குமார் என்பவர், தனது வீட்டை விற்று இதுவரை 56 ஆயிரம் ஹெல்மெட்களை இலவசமாக வழங்கியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தனது நெருங்கிய நண்பன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் ஹெல்மெட் அணியாமல் சென்று சாலை விபத்தில் உயிரிழந்ததால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஹெல்மெட்டுகளை இலவசமாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, செலவை சமாளிக்கும் வகையில் தனது மகனை அரசுப்பள்ளியில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ஒருவர் தனது வீட்டை விற்று பொதுமக்களுக்கு ஹெல்மெட்டுகளை இலவசமாக வழங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.