சிவகங்கையில் வினோத வழிபாடு...200 ஆண்டுகளாக மாறாத அதே பாரம்பரியம்...!

சிவகங்கையில் வினோத வழிபாடு...200 ஆண்டுகளாக மாறாத அதே பாரம்பரியம்...!
Published on
Updated on
1 min read

சிங்கம்புணரி அருகே உள்ள செகுடப்பர் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் பக்தர்கள் விநோதமாக வேடமிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே குரும்பலூர் கிராமத்தில் அமைந்துள்ள செகுடப்பர் கோயில் பங்குனி பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 200 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பாரம்பரிய விழாவில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூதம், குறவன் , குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடகங்கள் அணிந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

இவ்வாறு நேர்த்திக்கடன் செலுத்தினால் வேண்டியது நிறைவேறும் எனவும், கிராமத்தில் நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் எனவும் அக்கிராமத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அய்யனார் கோயிலில் பக்தர்கள் உடல் முழுவதும் சேறுபூசி ஆட்டம் பாட்டத்துடன் புலிக்குத்தும் வேட்டை என்ற வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் ஒன்று சேர்ந்து 200 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பாரம்பரியமாக இத்திருவிழாவை இக்கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com