மற்றவை

"புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை" - சுபாஷ் சார்கர்

Malaimurasu Seithigal TV

மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட்டால் தான், ஏழை எளிய மக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடையும் என மத்திய கல்வி துறை இணை அமைச்சர் சுபாஷ் சார்கர் பேட்டியளித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மத்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் 9 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு 593 பட்டதாரிகளுக்கு சான்றுகளை வழங்கி உரையாற்றினார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தற்போதைய சூழலில் பல்வேறு பட்டப் படிப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கான கற்பித்தல் தகுதியை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு தனி பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் கூறினார். 

புதிய தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அங்கமே இதுதான் என்றும், இந்த கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை என்றும் கூறினார். மேலும், மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட்டால் தான், ஏழை எளிய மக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடையும் எனவும் கூறினார்.