மற்றவை

கனமழையால் வெள்ளக் காடான மும்பை...ஆரஞ்ச் அலர்ட் விடுத்த வானிலை மையம்!

Tamil Selvi Selvakumar

மகாராஷ்டிரா  மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழையால் சாலைகள், குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.


மும்பையில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்த நிலையில், தானே, ராய்கட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரே நாளில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவானது. குறிப்பாக மும்பையில் வெளுத்து வாங்கிய கனமழையால், அந்தேரி குர்லா சாலையை பயன்படுத்த முடியாத அளவு தண்ணீர் தேங்கியது. நவி மும்பையில் முழங்கால் வரை தேங்கிய நீரால், இருசக்கர வாகனங்களை மக்கள் தள்ளிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

தொடர்ந்து டேம்பி பாலம், செம்பூர், சர்வே ஜங்ஷன், கட்கோபார் உள்ளிட்ட பகுதிகளின் சாலைகளும் மழைநீரால் மூழ்கியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர். இடுப்பளவு தண்ணீர் தேங்கிய பகுதிகளில் குதித்தும் நீந்தியும் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். இதனிடையே, மும்பைக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.