பொன்னியின் செல்வன் பாகம் 1 , தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி, உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது படத்தின் வசூல் உலகளவில் 300 கோடி ரூபாயை எட்டி வசூல் சாதனை படைத்துள்ளது.
1950களில் கல்கியின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை படமாக்க பலரும் முயற்சி செய்தாலும், அவர்களது முயற்சி பெரிதாக வெற்றி அடையவில்லை. இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில், பல பெரும் நட்சத்திரங்கள் நடித்து இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது பொன்னியின் செல்வன்.
அதன் முதலாம் பாகம் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது. உலகம் முழுவதும், ஐ-மேக்ஸ் -இல் வெளியான இந்த படமானது தற்போது 350 கோடி ரூபாய் வசூல் கடந்து சென்றுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ தகவலை, தயாரிப்பு நிறுவனமான சுபாஸ்கரனின் லைகா நிறுவனம், ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த தகவல் தற்போது ரசிகர்கள் படு வைரலாக்கி வருவதோடு, படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மிக ஆர்வத்தோடு காத்திருப்பதாகவும் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | அப்போ இந்து மதமே கிடையாது.. வெள்ளைக்காரன் கொடுத்த பெயர் அது.. அவரே சொல்லிட்டார்.. இப்போ என்ன பண்ண போறீங்க?
Success beyond boundaries!
Thank you for this tremendous response ❤️