அப்போ இந்து மதமே கிடையாது.. வெள்ளைக்காரன் கொடுத்த பெயர் அது.. அவரே சொல்லிட்டார்.. இப்போ என்ன பண்ண போறீங்க?

ராஜராஜ சோழன் குறித்தான வெற்றிமாறனின் கருத்தை ஆதரித்து பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்..!

அப்போ இந்து மதமே கிடையாது.. வெள்ளைக்காரன் கொடுத்த பெயர் அது.. அவரே சொல்லிட்டார்.. இப்போ என்ன பண்ண போறீங்க?

ரசிகர்களோடு கமல்ஹாசன்:

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல திரையரங்கில்  ரசிகர்களுடன் அமர்ந்து கண்டு களித்தார். 

செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்:

அவரோடு இணைந்து நடிகர்கள் விக்ரம், கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினரும் படத்தை கண்டு ரசித்தனர். பின்னர், பொன்னியின் செல்வன் படக்குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கி விட்டதாகக் கூறினார். 

இந்து மதம் இல்லை:

தொடர்ந்து, மன்னன் ராஜராஜசோழனின் மதம் எது என்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து பேசிய அவர், இந்து மதம் என்பது ராஜராஜ சோழன் காலத்தில் இல்லை என்று தெரிவித்தார். அப்போது, சைவம், வைணவம், சமணம் மட்டுமே இருந்ததாகவும் இந்து என்பதே வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

வெற்றிமாறனின் கருத்துகள்:

சில தினங்களுக்கு முன்பு விழா ஒன்றில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், திருவள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, சோழ மன்னன் ராஜராஜ சோழனை இந்து மன்னனாக அடையாளப்படுத்துவது போன்ற செயல்களால் தமிழர்களின் அடையாளத்தை பறிக்கிறார்கள் என குற்றம்சாட்டியிருந்தார். 

மீண்டும் சலசலப்பு:

இதனையடுத்து, மன்னன் ராஜராஜ சோழனின் மதம் எது? என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. வெற்றிமாறனுக்கு எதிராக பாஜக மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், வெற்றிமாறனை தொடர்ந்து கமல்ஹாசனும் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து என்ற மதமே கிடையாது எனக் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.