இலங்கையில் தயாரிக்கப்பட்ட யாளி என்ற விழிப்புணர்வு குரும்படம் இலங்கை மற்றும் தமிழகத்தை தொடர்ந்து கனடாவில் திரையிடப்பட உள்ளதாக அப்படத்தின் இணை இயக்குனர் சுஜா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள | இதானா சங்கதி...இல்லம் திரும்பிய உலகநாயகன் கமல் ஹாசன்...
போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாகனத்தை இயக்கினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இலங்கையைச் சேர்ந்த இளைஞர்களால் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த குறும்படம் இலங்கை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தில் திரையிடப்பட்டது.
தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக இந்த குறும்படம் கனடாவில் திரையிடப்படுவது குறித்து ,அப்படத்தின் இணை இயக்குனர் சுஜா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
மேலும் தெரிந்து கொள்ள | உலகநாயகன் கமலஹசானுக்கு சிகிச்சை...என்னவா இருக்கும்???
அப்போது பேசிய அவர் பரணிதரன் சுந்தரமூர்த்தி தயாரிப்பிலும் தக்ஷன் இயக்கத்திலும் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் அடுத்த கட்டமாக கனடாவில் வருகின்ற ஜனவரி மாதம் முதல் திரையிடப்பட உள்ளதாகவும் இப்படத்தின் மையக் கருத்தாக சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனத்தை இயக்கினால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இளைஞர்களை ஊக்கவிக்கும் வகையில் இப்படத்தில் அனைவரும் இலவசமாக நடித்துள்ளதாக இணை இயக்குனர் சுஜா கூறியுள்ளார்.