இதானா சங்கதி...இல்லம் திரும்பிய உலகநாயகன் கமல் ஹாசன்...

இதானா சங்கதி...இல்லம் திரும்பிய உலகநாயகன் கமல் ஹாசன்...

உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கமல்ஹாசன் இல்லம் திரும்பினார்.2 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


இல்லம் திரும்பிய கமல் :

Kamal Haasan in 2022 | Amazing spiderman movie, Actors ...

ஹைதராபாத் சென்று விட்டு சென்னை திரும்பிய நடிகர் கமலஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக பரிசோதனை மேற்கொள்வதற்காக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று இருந்தார் மருத்துவர்கள் ஆலோசனைப்படி லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியதன் அடிப்படையில் ஏழாவது மாடியில் அனுமதிக்கப்பட்டு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சாதாரண காய்ச்சலா அல்லது வேற ஏதேனும் காய்ச்சலா என்ற அடிப்படையிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ப்பட உள்ளதாக மருத்துவமனை சார்பில் தகவல் வந்தது.

ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுரை :

HD kamal wallpapers | Peakpx

முழுமையான சிகிச்சைக்கு பின்னரே நாளைய அல்லது நாளை மறுநாள் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,லேசான காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற கமல்ஹாசன் இன்று காலை 6:30 மணி அளவில் இல்லம் திரும்பினார். இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.