மாவட்டம்

நடுரோட்டில் இன்ஸ்டா ரீலுக்கு ஆடி உயிரை விட துணிந்த இளைஞர்கள்...

ஓடும் அரசு பேருந்தை நிறுத்தி இன்ஸ்டா ரீலுக்காக ஆடிய இளைஞர்களாக்ல் பெரும் பரபரப்பு நிலவியதை அடுத்து அவர்களை காவலர்கள் கண்டித்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

தற்போதைய இளைஞர்கள் என்ன செய்வதென்று தெரியாமல், சோசியல் மீடியாக்கள் மூலம் தங்களது இளமை பருவத்தை கழித்து வரும் அவலத்தை நாம் கண்ணார கண்டு வருகிறோம். அதிலும், இன்றைய குழந்தைகள், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் போன்ற செயலிகளில் வரும் லைக்குகள் மற்றும் கமெண்டுகளை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

அதிலும், தற்போதைய ரீல்ஸ்களில் இளைஞர்கள் தான் அதிகமாக தங்களது நேரத்தை செலவழைக்கும் இளைஞர்கள், சில லைக்குகளுக்காக உயிரை விடக்கூட துணிந்து வருகின்றனர். சமீபத்தில் கூட தெலங்கனாவில் ஒருவர் பாம்பைக் காப்பாற்றி, அதனுடன் ரீல்ஸ் எடுக்கும் மோகத்தில் அதனை முத்தம் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது பயந்த பாம்பு, அவரைப் பட்டென்று போட்டுவிட்டு ஓடி விட்டது.

அது மட்டுமின்றி பல வகையான ரிஸ்குகளை எடுத்து ரீல்ஸ் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை எண்ணூர் நெடுஞ்சாலை ஓரமாக அரசு பேருந்தை நிறுத்தி இரண்டு இளைஞர்கள், பிரபல டிக்டாக் பாடலான, “மேரி மீ” என்பதற்கான “சிக்னேச்சர் ஸ்டெப்” அதாவது, அதற்கான பிரத்யேக நடனம் ஆடி அனைவரையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

இந்த சோசியல் மீடியா பைத்தியம் பிடித்து இளைஞர்களின் பெயர் பார்த்திபன் மற்றும் மோசஸ். இவர்களை தொக்காக தூக்கிய காவலர்கள் நன்றாக கவனித்து விட்டார்கள் போலும், அவர்கள் தற்போது நடு ரோட்டில் நின்று, மற்ற இளைஞர்களுக்கு பெரும் முன்னொடியாக இருந்து வருகின்றனர். பேருந்தை நிறுத்தி ஆட மாட்டோம், பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்க மாட்டோம் என்றெல்லாம் கோஷங்களுடன், சாலைகளில் நின்று கோஷமிட்டு வருகின்றனர்.

இவர்களது ரீல்ஸ் எவ்வளவு வைரலானதோ, அவ்வளவு வைரலாக அவர்களது விழிப்புணர்வு பிரச்சாரமும் வைரலாகி வரும் நிலையில் இந்த இளைஞர்களின் கதை பெரும் பாடமாக இன்றைய பல சோசியல் மீடியா பைத்தியங்களுக்கு அமைவரது குறிப்பிடத்தக்கது.