மாவட்டம்

தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்... நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?

தொடர்ந்து காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக செய்யும் அட்டகாசங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை புங்கம்காளையம் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் வனப்குதியிலிருந்து வெளியேறிய 9 யானைகள் கொண்ட காட்டு யானை கூட்டம் பொன்னுசாமி என்பவரின் தோட்டத்தில் நுழைந்து அங்கிருந்த 300 க்கும் மேற்பட்ட வாழைமரங்களை சேதப்படுத்தியது.

அதே போன்று கார்டன் சிட்டி பகுதியில் உள்ள ரங்கராஜ் என்பவரின் தோட்டத்தில் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த 50 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது.இதனை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் காலை 5 மணியளவில் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிகுள் விராட்டினர்.

அதே போன்று ஆதிமாதையனூர் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் கூட்டம் ஆதிமாதையனூர் ஊருக்குள் நுழைந்து பொது மக்களை அச்சுறுத்தியது.தினசரி இரவு நேரங்களில் வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் காட்டு யானைகளால் பொது மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.போதிய வனத்துறையினர் இல்லதா காரணத்தால் யானையை விரட்டும் பணி தொய்வு ஏற்படுவதாக பொது மக்கள் குற்றசாட்டி வருகின்றனர்.