கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே வனப்பகுதி கிராமத்தில் இன்று அதிகாலை 3 காட்டு யானைகள் முகாமிட்டு அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தியதாக விவசாயிகள் வருத்தும் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து தமிழக எல்லை வனப்பகுதியான வேப்பனப்பள்ளியை அடுத்த பதிமடுகு, எப்ரி உள்ளிட்ட வனப்பகுதி கிராமத்தில் இன்று அதிகாலை 3 காட்டு யானைகள் முகாமிட்டு வெங்கடேசன் என்பவரது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட வாழை தோட்டங்களை சூரையாடின. மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட முட்டைகோஸ், தக்காளி உள்ளிட்டவைகளை காட்டு யானைகள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியது.
இந்நிலையில் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் அலட்சியம் காட்டுவதாக வேப்பனப்பள்ளி வனப்பகுதி கிராம மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். மேலும் விவசாய நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை. தக்காளி, முட்டைகோஸ் உள்ளிட்டவைகளை காட்டு யானைகள் நாசம் செய்ததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்
இதையும் படிக்க : பிரதமரை சந்தித்த மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர்...! என்ன காரணம்...?