தஞ்சாவூர் | திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் என்றாலே பட்டுப் புடவைக்கு பெயர் பெற்றது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் முகூர்த்தம் வைத்தாலே பட்டுப் புடைகள் தேர்வு செய்ய திருபுவனத்திற்கு படை எடுப்பது வாடிக்கை.
அசல் பட்டு அசல் ஜரிகைக்கு பெயர் பெற்ற திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் சுமார் 2000 நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பழைய பட்டுப்புடவைகளை திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க வாடிக்கையாளர்களை கண்டறிந்து பட்டுப் புடவைகளை சேகரித்து கண்காட்சியில் அணிவகுத்துள்ளனர்.
மேலும் படிக்க | கோடை காலத்தை ஒட்டி செழித்து வளர தொடங்கிய மலர் நாற்றுகள்...
60 ஆண்டுகளுக்கு முன்புள்ள பட்டுப் புடவையில் சர்வ மதங்களை ஒருங்கிணைத்தும், சுவாமி படங்கள், குழந்தைகள், மனித உருவங்கள் என நெசவாளர்கள் தங்கள் கலையுணர்வுடன் கைவண்ணத்தை காட்டியுள்ளது அணிவகுப்பில் வெளிப்பட்டது. ஏராளமான பெண்கள் கண்காட்சியில் பழைய பட்டு புடவைகளை பார்த்து அதிசயத்து வியந்தனர்.
கண்காட்சிக்கு வருகை தந்த சென்னை நெசவாளர் சேவை மைய இயக்குனர் முத்துசாமி பழைய பட்டுப்புடவைகளையும் நெசவாளர்களின் கலை நயமான வேலைப்பாடுகளையும் பார்வையிட்டு பாராட்டினார். கண்காட்சியில் 500க்கும் மேற்பட்டோரின் பழைய பட்டுப் புடவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும் படிக்க | இனி இந்துசமய அறநிலைத்துறை பள்ளிகளும்.... !!!