இனி இந்துசமய அறநிலைத்துறை பள்ளிகளும்.... !!!

இனி இந்துசமய அறநிலைத்துறை பள்ளிகளும்.... !!!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று  நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

1500 கோடி ரூபாயில்:

அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மெம்படுத்த வரும் நிதியாண்டில் 1500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ள்ப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலக்கிய திருவிழா:

அதனைத் தொடர்ந்து வரும் ஆண்டில் 10 கோடி ரூபாய் மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கைய திருவிழா நடத்தப்படும் என்று கூறியதுடன் சர்வதேச புத்தக கண்காட்சி வரும் நிதியாண்டிலும் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறையின் கீழ்:

பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அதனுடன் இந்துசமய அறநிலைத்துறை பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் கூறியுள்ளார்.  இனி முதல் அனைத்து துறைகளும் நடத்தும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அடையாளமாக..:

சங்கம் வளர்த்த மதுரையில் 2 ல்டச்ம் சதுர அடியில் மாபெரும் நூலகம் அமைக்கப்பட்டு வருவதாக அறிவித்த நிதியமைச்சர் குழந்தைகளை வெகுவாக கவரும் வகையில் கட்டப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.  மேலும் இந்த நூலகம் தென் தமிழ்நாட்டின் அடையாளமாக திகழும் எனவும் ஜூன் மாதத்தில் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com