மாவட்டம்

குடியிருப்புகளில் புகுந்த பாம்புகளால் கதிகலங்கிய மக்கள்...

நெல்லை பணங்குடி மற்றும் சிவகங்கை தேவகோட்டை பகுதிகளில் உள்ள குடியிருப்பில் பாம்புகள் புகுந்த நிலையில், வனத்துறையினர் மீட்டுள்ளனர். இதனால், அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Malaimurasu Seithigal TV

திருநெல்வேலி | பணகுடி அருகே பாம்பன்குளம் ஊரைச் சார்ந்த மகேஷ் என்பவர் தோட்டத்தில் சுமார் 7 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று விவசாயிகளை அச்சுறுத்தி வந்தது. இது குறித்து விவசாயிகள் வள்ளியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஏழு அடி நீளம் உள்ள நல்ல பாம்பை லாவகமாக பத்திரமாக மீட்டு பணகுடி வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

சிவகங்கை | தேவகோட்டை பகுதியில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் குடியிருப்பு பகுதிகளில் அதிகளவு பாம்புகள் சுற்றித் திரிகின்றனர். இந்நிலையில் தேவகோட்டை நடராஜபுரம் நேரு தெருவில் சரவணன்,சரண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

சரண்யா சமையலறையில் சமைக்க சென்றபோது ஓடு வீட்டில் மேற்கூறையில் வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. மேலே பார்த்தபோது பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது,அதிர்ச்சி அடைந்த சரண்யா உடனடியாக தேவகோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிமணி தலைமையிலான காவலர்கள் ஓடு வீட்டின் மேற்கூறையில் மேலே ஏறி நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு உள்ளே இருந்தது 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை சாமர்த்தியமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். பாம்பு பிடித்த தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினார்.