மாவட்டம்

மாண்டஸ் புயல் தாக்கி 100 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதம்...

சென்னை காசிமேட்டில், மாண்டஸ் புயல் தாக்கி 100க்கும் மேற்பட்ட விசைபடகுகள் உடைந்து சேதமாகி உள்ளது

Malaimurasu Seithigal TV

காசிமேடு, சென்னை | வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலானது நேற்றிரவு கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் பலத்த காற்று வீசியது.

பல இடங்களில் புயலினால் உண்டான பாதிப்புகள் வெளியாகி வரும் நிலையில் சென்னை காசிமேடு கடற்கரையில் விசைப்படகுகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 100க்கும் மேற்பட்ட படகுகள் புயலில் வேகத்தில் உடைந்து சேதமடைந்துள்ளன.

மேலும் 15க்கும் மேற்பட்ட  படகுகள் நீரில் உள்ளேயும் மூழ்கியுள்ளன. முன் கூட்டியே மீனவர்கள் எச்சரிக்கையோடு இருந்தாலும் கூட அவர்களால் சிறிய வகை பைபர் படகுகளை மட்டுமே பாதுகாக்க முடிந்தது.

பெரிய வகை விசைப்படகை கரைக்கு ஏற்றுவது கடினமானது ஆதலால் கடலின் கரையிலேயே நிறுத்தி வைப்பார்கள். புயலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியா வண்ணம் இந்த சேதம் ஏற்பட்டுள்ளது. மீன்வளத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்ட பின்னரே தான் படகுகளின் சேதம் குறித்த முழு விபரங்கள் தெரியவரும். .