மாவட்டம்

வனத்துறையினரின் அலட்சியத்துக்கு பலியாகும் நூற்றுக்கணக்கான ஆமைக்குஞ்சுகள்...

கடலூரில் வனத்துறையினர் அலட்சியத்தால் 200க்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகள் உயிரிழந்துள்ளது.

Malaimurasu Seithigal TV

கடலூர் | ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகள் கடற்கரையோரம் முட்டையிட்டு செல்வது வழக்கம். ஆனால், அந்த முட்டைகளை நாய்கள் சாப்பிட்டு விடுவதால் இதனை தடுக்க கடலூர் சமூக வன ஆர்வலர் செல்லா என்பவர் முதல் அடி வைத்துள்ளார்.

இன்று வனத்துறையினர் உதவியுடன் சமூக வன ஆர்வலர் செல்லா என்பவர் அதிகாலையில் கடற்கரையோரம் பயணித்து ஆமைகள் விட்டுச்செல்லும் முட்டைகளை சேகரித்து அதனை பராமரித்து குஞ்சுகளை பொறித்த பின்னர் பாதுகாப்பாக கடலில் விட்டு வந்தார்.

இதுவரை இந்த ஆண்டு சுமார் 2000 க்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகளை கடலில் ஈடுபட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக வனத்துறையினர் சமுக வன ஆர்வலரான செல்லாவை பணியினை செய்யக்கூடாது என நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் ஆமைக்குஞ்சு பொரிப்பகத்தில் இரண்டு நாட்களாக வனத்துறையினர் அலட்சியத்தால் பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது.

இன்று காலை சுமார் 200க்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகள் வெளியே உயிரெழுந்து காணப்பட்டதால் அங்கு இருக்கக்கூடிய பொதுமக்கள் சோகத்துடன் உயிரிழந்த ஆமைக்குஞ்சுகளை சேகரித்து வைத்தனர்.

பின்னர் அதில் உயிருடன் இருந்த ஆமை குஞ்சுகளை தண்ணீரில் போட்டு பின்னர் கடலில் பாதுகாப்பாக விட்டனர். வனத்துறையின் அலட்சியத்தால் 200க்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.