நாகை | தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க அறக்கட்டளை சார்பில் 10 வகையான நிபந்தனைகளுடன் பசுமையான தூய்மையான பள்ளி தேர்வுக்கான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் பசுமையான, தூய்மையான பள்ளிக்கான விருது வழங்கும் நிகழ்வு பள்ளியில் நடைபெற்றது.
பசுமையான தூய்மையான பள்ளியாக தேர்வான வடக்குப்பனையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விருது மற்றும் ரூ 10,000 க்கான காசோலையினையும் , திருமருகல் ஊராட்சி ஒன்றியம், கீழ தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விருது மற்றும் ரூ 5,000 க்கான காசோலையினையும், வழங்கி பாராட்டினார்.
விழாவிற்கு ஆட்சியர் வருவதற்கு முன்பாக விருந்தினருக்கு தேநீர் வழங்குவதற்காக 3 மாணவர்களை பள்ளி நேரத்தில் பயன்படுத்திய பள்ளி நிர்வாகம் செயலை கண்ட சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்தனர்.
பள்ளி நேரத்தில் பிற வேலைகளுக்கு மாணவர்களை பயன்படுத்தக் கூடாது என்று இருந்தும் எப்படி தேனீர் வாங்க மாணவர்களை பயன்படுத்திகிறார்கள் என கேள்வி எழுப்பி உள்ள அவர்கள் பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.