சென்னை | ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் மோரிஸ் இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார் இவரிடம் நேற்று இரவு காவல்துறையில் பணியாற்றும் மயிலாப்பூரை சேர்ந்த பாவடியான் என்பவரிடம் 3½ லட்ச ரூபாய்க்கு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
முன்பணமாக ரூபாய் 50,000 கொடுத்து நேற்று மாலையில் காரை எடுத்து வந்துள்ளார். நேற்று இரவு மோரிஸ் வீட்டின் அருகில் காரை நிறுத்தி வைத்துவிட்டு காலையிலேயே பழுது பார்ப்பதற்காக வடபழனி கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள செட்டில் விடுவதற்கு சென்றுள்ளார்.
இன்று காலை சுமார் 4:30 மணி அளவில் ஆதம்பாக்கத்தில் இருந்து நண்பர்கள் சந்தோஷ் மற்றும் ஆகாஷ் ஆகியோருடன் புறப்பட்டு கங்கையம்மன் கோவில் தெரு அருகே வரும்போது எஞ்சினில் கரும்புகை வெளியே வந்ததால் ஓரமாக காரை நிறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | நீதிக்கட்சி தினம் - நெகிழ்வுடன் நினைவுகூர்ந்த முதலமைச்சர்...!
காரிலிருந்து இறங்கிய நிலையில் சிறிது நேரத்தில் வாகனம் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளது. காலை 05.33 மணிக்கு பாஸ்கர் தலைமையில் வந்த அசோக் நகர் தீயணைப்பு துறை மற்றும் 4 தீயணைப்பு வீரர்கள் காரில் ஏற்பட்ட தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
தகவல் அறிந்த அசோக் நகர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | கரூர்: நட்டநடு சாலையில் கொளுந்துவிட்டு எரிந்த பேட்டரி கார்.. ஸ்கூட்டரை தொடர்ந்து காரும்..!