மாவட்டம்

மக்னா - காட்டு யானைக்கு மயக்க ஊசி...

பிடிபட்டுள்ள காட்டு யானையை ஆனைமலை யானைகள் காப்பக முகாமில் விட்டுவிட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

கடந்த நான்கைந்து மாதங்களாக, இரண்டு காட்டு யானைகள், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது விளைநிலங்களில் புகுந்து விளைப்பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்திருந்தனர்காட்டு யானைகளை விரட்டியடிக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையி்ல் அச்சுறுத்தி வந்த காட்டுயானைகளை பிடிக்க வனத்துறையினர் தி்ட்டமிட்டு, ஆனைமலை யானைகள் முகாமிலிருந்து சின்னதம்பி என்ற பழக்கப்பட்ட கும்கி யானையினை இரண்டு நாட்களுக்கு முன்னர் பாப்பாரப்பட்டிக்கு வரவழைத்து காட்டு யானையினை பிடிக்கும் பணியினை வனத்துறை துவக்கியது.

மூன்றாவது நாளான இன்று பெரியூர் அருகே ஈச்சம்பள்ளம் வனப்பகுதியில் சுற்றிதிரிந்த இரண்டு காட்டு  யானைகளில் ஒரு காட்டு யானைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தியுள்ளனர்.

மயக்கமடைந்துள்ள காட்டு யானையினை கும்கி யானை உதவியுடன் காட்டு யானையினை தயாராக உள்ள வாகனத்தில் ஏற்றி ஆனைமலை  யானைகள் முகாமில் விட்டுவதாக திட்டமிட்டு அதற்கான பணிகளில் வனத்துறையினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மயக்க ஊசி செலுத்தப்பட்டிருக்கும் காட்டு யானையானது மக்னா யானை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஆண் பாலினத்திற்கும், பெண் பாலினத்திற்கும் சேராத மூன்றாம் பாலினத்தை சேர்ந்தது தான் மக்னா யானை.