மாவட்டம்

2050 கிலோ மாவில், 1 லட்சம் வடைகள் கொண்டு அனுமனுக்கு வடை மாலை...

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை ஒட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்திற்கு வடை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Malaimurasu Seithigal TV

நாமக்கல் | ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரம் அன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டு வருகின்ற டிசம்பர் 23-ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இந்த நாளை ஒட்டி நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அலங்காரங்கள் நடைபெற உள்ளது.

18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஒரு இலட்சத்து 8 வடைகளை கொண்டு பிரமாண்டமான மாலை அலங்காரமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில் வடமாலை தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.

இந்த பணியினை மேற்கொள்ள திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து ரமேஷ் கூறுகையில் வடை தயாரிக்கும் பணிக்கு 2050 கிலோ எடை கொண்ட உளுத்தம் பருப்பு மாவும், 32 கிலோ மிளகு மற்றும் 32 கிலோ சீரகம் மற்றும் 600 லிட்டர் நல்லெண்ணெய், 125 கிலோ உப்பு கொண்டு வடை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

4 நாட்களுக்கு நடைபெறும் இப்பணி இரவு பகலாக இப்பணி நடைபெற்று  23-ம் தேதி அதிகாலை ஆஞ்சநேயருக்கு வடமாலை அலங்காரம் செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.