கவர் ஸ்டோரி

பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன??!!

Malaimurasu Seithigal TV

பா.ஜ.கவில் முதலமைச்சர் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் எந்த சலசலப்பும் இல்லை எந்த கலகமும் இல்லை என்று அரசியல் விமர்சகர் ஜடாசங்கர் சிங் கூறியுள்ளார். இதற்கு பா.ஜ.கவின் வலுவான தலைமையே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு குரல்கள்:

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு மாநில முதலமைச்சர்களை பாஜக மாற்றியது.  எவ்வளவு பெரிய மாற்றத்துக்குப் பிறகும், கட்சியில் கலகம் என்ற பெயரில் மாநிலங்களில் எந்தக் சலசலப்பும் ஏற்படவில்லை. எந்தத் தலைவரின் வாயிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழவில்லை. அதே சமயம் ராஜஸ்தானில் மட்டும் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற போது கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

பஞ்சாபில் முதலமைச்சர் மாறிய பிறகு அவர் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை. உண்மையில் இந்த நிலைமைகள் அனைத்தும் பலவீனமான உயர் தலைமைத்துவத்தினால் ஏற்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏனென்றால் நீண்ட காலமாக கட்சியில் நிரந்தர தேசிய தலைவர் இல்லை. இது கட்சியின் அமைப்பு மற்றும் ஒழுக்கத்தை பாதிப்பதாக கூறுகின்றனர்.

ஆர்.என்.திரிவேதி:

காங்கிரஸில் நடக்கும் கலவரம், கிளர்ச்சி என, காங்கிரசில் நொடிக்கு, நொடிக்கு கலகம் மட்டுமின்றி, அக்கட்சியின் பெரிய தலைவர்களே வெளியேற, என்ன காரணம் என்ற விவாதம், அரசியல் களத்தில் எழுந்துள்ளது. அரசியல் விமர்சகர் ஆர்.என்.திரிவேதி கூறுகையில், ”காங்கிரஸின் தற்போதைய மிகப்பெரிய பலவீனம், அதற்கென நிரந்தர தேசியத் தலைவர் இல்லாததுதான்.

மத்திய தலைமையின் பலவீனத்தின் காரணமாக, மாநில அமைப்புகள் தங்கள்  கட்டமைப்பை திறம்பட வலுப்படுத்த முடியவில்லை. பலவீனமான தலைமையால் தான் கட்சியில் கலகம்” என்று திரிவேதி கூறியுள்ளார்.  மேலும் “ பலவீனமான மத்திய தலைமையை மாநிலத் தலைமை அதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதே காங்கிரஸில் கிளர்ச்சிக்கு முக்கியக் காரணம். குறிப்பாக அதிகாரம் இருக்கும் இடத்தில், அரசின் தலைமை ஆதிக்கம் செலுத்துகிறது.” எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ”சமீபகாலமாக காங்கிரஸ் ஆட்சி மாற்றம் பற்றி பேசப்பட்ட மாநிலங்களின் பழைய வரலாற்றைப் பாருங்கள்.  பஞ்சாபில் முதலமைச்சரை கட்சி மாற்றியதால், சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ” என்று கூறியுள்ளார்.

ஜடாசங்கர் சிங்:

முதலமைச்சர் மாற்றம் குறித்து பாஜகவில் எந்த சலசலப்பும் இல்லை, கிளர்ச்சியும் இல்லை” என்று அரசியல் விமர்சகர் ஜடாசங்கர் சிங் கூறியுள்ளார். இதற்கு பா.ஜ.கவின் வலுவான தலைமையே காரணம் என்று கூறியுள்ளார். மேலும் “இதை காங்கிரஸ் காலத்துடன் இணைத்துப் பார்த்தால், இந்திரா காந்தியின் வலுவான தலைமையின் கீழ், இன்றைய காங்கிரஸை போல மற்ற கட்சிகளின்  நிலைமைகள் இருந்தன” என்பது தெரியும் என்று சிங் தெரிவித்துள்ளார்.

அதனுடன் “ராஜீவ் காந்தியின்  தலைமையின் கீழ் வலுவான கட்சி அமைப்பு இருந்தது.  இருவருமே தலைவர்கள், அவர்களின் தலைமையில் கட்சிக்கு நாடு முழுவதும் வாக்குகள் கிடைத்ததோடு மட்டுமல்லாமல், அமைப்பும் வலுப்பெற்று இருந்தது. இன்று பா.ஜ.கவில், நரேந்திர மோடி, அமித் ஷா ஜோடியுடன், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கட்சியை மிக வலுவான அமைப்பாக மாற்றியுள்ளனர்.  கட்சி அமைப்பில் எவ்வித எதிர்ப்பு குரலும் இல்லை. கட்சியின் கீழ்மட்டத்தில் உள்ள தொண்டர்கள் மத்திய தலைமையின் முடிவு தங்கள் கட்சியை பலப்படுத்துகிறது என்ற நம்பிக்கையோடு இருப்பதால் தான் இது சாத்தியமாகிறாது.” என்று ஜடாசங்கர்  சிங் கூறியுள்ளார்.

ஹரிசங்கர்:

மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் நிபுணருமான ஹரிசங்கர் கூறுகையில், ”தேசிய அளவில் வலுவான தலைமை இருந்தாலும், கீழ்மட்டத்தில் உள்ள தொண்டர்களுக்கு தலைமை எடுத்த முடிவு சரியானது என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தால், அமைப்பை பலப்படுத்த முடியாது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பாஜக தொடர்ந்து பல மாநிலங்களில் முதலமைச்சர்களை மாற்றியதற்கு இதுவே காரணம்.” என்று கூறியுள்ளார்.  மேலும் “பா.ஜ.கவின் இதுபோன்ற புதிய சோதனைகளால், மக்கள் மத்தியில் வரவேற்பும் அதிகரித்து வருகிறது. ” என்று ஹரிசங்கர் தெரிவித்துள்ளார்.

ராஜ்குமார்:

பாஜக ஒழுக்கமான கட்சி. பாஜகவிற்கு தேசமே முதலிடம் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். கட்சி என்பது ஒரு சித்தாந்தம், கட்சியின் ஒவ்வொரு தொண்டனும் அந்த சித்தாந்தத்திற்காக உழைக்கின்றனர். ஒழுக்கம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது மற்றும் கட்சியின் தலைமை மிகவும் வலிமையானது மற்றும் நம்பகமானது. கட்சியில் கடைசியாக நிற்கும் தொண்டர் கூட அதிக அளவு நம்பிக்கையுடன் இருக்கிறார். இன்று பாஜக மீது நாட்டு மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருப்பதற்கு இதுதான் காரணம்.” என்று கூறியுள்ளார் பாஜகவின் எம்பியான ராஜ்குமார் சாஹர்.  மேலும் ”காங்கிரஸ் கட்சியில் எந்த நோக்கமும் இல்லை கருத்தியல் பற்றிய விவாதமும் இல்லை. காங்கிரஸ் குடும்ப கட்சியாகவே மாறிவிட்டது. எஞ்சியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு அங்கு ஒரு குடும்பத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்று தெரியும்.”  என்று எம்பி ராஜ்குமார் கூறியுள்ளார்.

                                                                                                     -நப்பசலையார்