கவர் ஸ்டோரி

சீனாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ்...நிதியுதவி செய்த அமெரிக்கா...உண்மையில் நடந்தது என்ன?!!

Malaimurasu Seithigal TV

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியிலிருந்து வெளியான கொரோனா வைரஸ் மனிதர்களால் தயாரிக்கப்பட்டது என அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையான அச்சங்கள்:

மனிதனால் உருவாக்கப்பட்ட கொரோனா தொற்றுநோயான கோவிட்-19 வைரஸின் பரவல் குறித்து ஆரம்பத்திலிருந்தே எழுப்பப்பட்ட அச்சங்கள் உண்மையானதாகவே தெரிகிறது.   இப்போது சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் பணிபுரிந்த விஞ்ஞானி ஒருவர், கோவிட்-19 வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். 

மனிதனால்..:

சீனாவின் வுஹானில் உள்ள சர்ச்சைக்குரிய ஆய்வகத்தில் பணிபுரிந்த அமெரிக்க விஞ்ஞானி ஒருவர், கோவிட்-19 மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் என்றும், அது வுஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்தது என்றும் கூறியுள்ளார்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் இருந்து கோவிட் கசிந்ததாக அந்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

வுஹானைப் பற்றிய உண்மை:

தொற்றுநோயியல் நிபுணர் ஆண்ட்ரூ ஹஃப் தனது புதிய புத்தகமான 'வுஹானைப் பற்றிய உண்மை'யில் இதைக் குறித்து எழுதியுள்ளார்.  சீனாவில் கொரோனா வைரஸ் ஆராய்ச்சிக்கு அமெரிக்க அரசாங்கம் நிதியுதவி செய்ததால் இந்த தொற்றுநோய் ஏற்பட்டது எனவும் ஹஃப் கூறியுள்ளார்.   ஹஃப்பின் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் பிரிட்டிஷ் செய்தித்தாளான 'தி சன்' இல் வெளியிடப்பட்டுள்ளது.  

மறுக்கும் சீனா:

கோவிட் வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது எனவும் வுஹானின் ஆய்வகத்திலிருந்து பரவியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  இருப்பினும், சீன அரசாங்கம் தொடர்ந்து இந்த கூற்றுக்களை மறுத்து வருகிறது.  அரசு அதிகாரிகள் மற்றும் ஆய்வக ஊழியர்கள் அனைவரும் இந்த ஆய்வகத்தில் வைரஸ் தோன்றியது என்பதை தொடர்ந்து மறுத்து வருகிறது.

-நப்பசலையார்