2022ல் இந்தியாவிற்கு அனுப்பும் பணம் பத்தாயிரம் கோடியா...என்ன கூறுகிறது உலக வங்கி?!!! 

2022ல் இந்தியாவிற்கு அனுப்பும் பணம் பத்தாயிரம் கோடியா...என்ன கூறுகிறது உலக வங்கி?!!! 
Published on
Updated on
1 min read

2022ல் இந்தியாவிற்கு அனுப்பும் பணத்தின் தொகை பத்தாயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 7.5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

முன்னணியில் இந்தியா:

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த நாட்டிற்கு பணம் அனுப்பும் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது.  2022ல் இந்தியா அனுப்பும் தொகை 100 பில்லியன் டாலரை எட்டும் என உலக வங்கி அறிக்கை கூறியுள்ளது.  கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், பணம் அனுப்பும் விகிதம் 7.5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கலாம் எனவும் உலக வங்கி அறிவித்துள்ளது.  2021ல் இந்தியாவிற்கு 8900 கோடி பணம் வந்ததாகவும்,  ஆனால் அது 2022ல் பத்தாயிரம் கோடியை எட்டும் என்றும் அறிக்கை கூறியுள்ளது. 

இந்தியாவிற்கு அடுத்து:

அதே நேரத்தில், இந்தியாவுக்கு அடுத்தபடியாக, மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ், எகிப்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பணம் அனுப்புவதில் முதல் பத்து நாடுகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.  இதில் மெக்சிகோவில் இருந்து 60 பில்லியன் டாலர், சீனாவில் இருந்து 51 பில்லியன் டாலர், பிலிப்பைன்சில் இருந்து 38 பில்லியன் டாலர், எகிப்தில் இருந்து 32 பில்லியன் டாலர், பாகிஸ்தானில் இருந்து 29 பில்லியன் டாலர்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கூறியுள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com