கவர் ஸ்டோரி

வெண்கல வயதை சேர்ந்த மரணக் கிணறு....முழு விவரம் சுருக்கமாக!!!

Malaimurasu Seithigal TV

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு நாளும் புதியவைகளை கண்டுபிடிப்பிடிக்கின்றனர்.   சில நேரங்களில் இந்த கண்டுபிடிப்புகள் நம்புவதற்கு கடினமான வகையில் மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது. 

வெண்கல வயது:

இந்த வகையில் தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மரக்கிணறு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த கிணறு ஜெர்மனியின் பவேரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இது உலகின் வெண்கல வயது காலத்தை சேர்ந்ததாக கூறப்படுகிறது.  இது சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது.  இந்த கிணற்றில் 100க்கும் மேற்பட்ட பழமையான கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

மரணக் கிணறு:

கிணறுகளிலும், ஆறுகளிலும் காசுகளைப் போட்டு சப்தம் கேட்பதை நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆறுகள், குளங்கள் அல்லது கிணறுகளில் ஒரு நாணயத்தை போட்டு ஆசைகளைக் கேட்பதன் மூலம் அவை நிறைவேறும் என்று இந்தியாவில் ஒரு நம்பிக்கை உள்ளது.  தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கிணறும் இதே வழக்கத்தைக் கொண்டுள்ளதாக தெரிகிறது.  விருப்பங்களை நிறைவேற்றும் இந்த மரக்கிணறு பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

பழமையான பொருள்கள்:

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த கிணற்றில் 70 க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட மட்பாண்ட பாத்திரங்கள், பல அலங்கார கிண்ணங்கள், கோப்பைகள் மற்றும் பானைகள் உட்பட பல தொல்பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.  இவை அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் போலல்லாமல்  சிறப்பான தருணங்களில் பயன்படுத்தப்பட்டவையாக தெரிகிறது.  கூடுதலாக, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கிணற்றில் இருந்து இரண்டு டஜன் வெண்கல ஆடை ஊசிகள், ஒரு வளையல், நான்கு அம்பர் மணிகள், இரண்டு உலோக சுருள்கள், ஒரு விலங்கு பல் போன்றவற்றையும் கண்டெடுத்துள்ளனர்.
 
பாதுகாப்பாக...:

3,000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் கிணறு மிகவும் அரிதானது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜோச்சென் ஹேபர்ஸ்ட்ரோக் கூறியுள்ளார்.  நினைவுச்சின்னப் பாதுகாப்புக்கான பவேரிய மாநில அலுவலகத்தில் தொல்பொருள் ஆய்வாளராக ஜோச்சென் ஹேபர்ஸ்ட்ரோ பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  கிணற்றில் உள்ள மரச் சுவர்கள் தரையில் கச்சிதமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன எனவும் இதனால் இந்த சுவர்கள் நிலத்தடி நீரில் அரிதாகவே ஈரமாக உள்ளதால் கிணற்றில் காணப்படும் கலைப்பொருட்கள் பாதுகாப்பாக உள்ளன எனவும் ஜோச்சென் தெரிவித்துள்ளார்.

தொடரும் ஆராய்ச்சி:


 
தற்போது இவை தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகவும் இந்தப் பொருட்களிலிருந்து அந்தக் காலத்து மக்களின் அன்றாட வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது என்று ஜோச்சென் கூறியுள்ளார்.  மேலும் பாதுகாக்கப்பட்ட தொல்பொருட்களின் அடிப்படையில் பார்க்கும் போது கிராமவாசிகள் அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, கிணற்றின் அடிப்பகுதியில் இந்த பொருட்களை வைத்திருந்திருக்கலாம் எனவும்,  உள்ளே காணப்படும் பொருள்கள் மேலே இருந்து எறியப்படவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். 

-நப்பசலையார்