பதவியை ராஜினாமா செய்தார் நியூசிலாந்து பிரதமர்......காரணம் என்ன?!!!

பதவியை ராஜினாமா செய்தார் நியூசிலாந்து பிரதமர்......காரணம் என்ன?!!!

பிரதமர் பதவியின் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பது தெரியும் ஆனால் இப்போது தன் பதவிக்கு சரியாக சேவை செய்ய முடியவில்லை.

பிரதமர் ஜெசிந்தா:

நியூசிலாந்தில் ஐந்தரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஜெசிந்தா ஆர்டெர்ன் அதிர்ச்சிகரமான முடிவை எடுத்துள்ளார்.  ஜெசிந்தா ஆர்டெர்ன் அவரது பதவிக் காலத்தில், கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்டதோடு நாட்டை வெற்றிகரமாக கொரோனாவிலிருந்து மீட்டெடுத்தவராவார். 

ராஜினாமா:

தற்போது தனது குடும்பத்தில் கவனம் செலுத்த விரும்புவதாகவும் அதனால் தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.  கடந்த 2017ஆம் ஆண்டு நியூசிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு அப்போது வயது வெறும் 37 என்பது குறிப்பிடத்தக்கது.  உலகின் மிக இளம் வயது பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் ஜெசிந்தா.  

மக்களிடம்:

அவரது முடிவை நாட்டு மக்களுக்குத் தெரிவித்த ஜெசிந்தா ஆர்டெர்ன், பிரதமர் பதவியின் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பது அவருக்கு தெரியும் என்றும், ஆனால் இப்போது தன் பதவிக்கு சரியாக சேவை செய்ய முடியவில்லை என்றும் கூறியுள்ளார். 

பதவி விலகல்:

நியூசிலாந்து பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சமீபத்தில் அறிவித்தார்.  பிப்ரவரி 7ம் தேதிக்குள் பதவியை விட்டு விலகுவேன் என்று கூறியுள்ளார்.  இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், பிரதமராக பதவியேற்கும் கடைசி நாள் பிப்ரவரி 7 என்றும் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியதாக நியூசிலாந்து அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  2023ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  மின்னலின் பாதையை மாற்றியமைத்து சாதனை.... நன்மைகள் என்னென்ன?!!