அரசின் திட்டங்கள், மக்களை தலை நிமிர வைப்பதற்கு பதிலாக கையேந்த வைப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு வில்லரசம்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதமர் மோடிக்கு எதிரான மனநிலை மக்களிடையே உருவாக வேண்டும், அதற்கு இந்தியா கூட்டணி முயன்றால் வாழ்த்துகள் எனக் கூறினார். மேலும் நடிகை விஜயலட்சுமி விவகாரத்தை மிகவும் அமைதியாக கடந்து செல்ல விரும்புவதாகவும், புகார் உண்மையாக இருப்பின் காவல்துறையினர் விசாரிக்கட்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கர்நாடகாவில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆளுகிறது எனவும், காவிரியில் தண்ணீர் தர அந்த அரசு மறுப்பதாகவும் குற்றம்சாட்டியவர், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டியதுதானே என்று வினவினார். மேலும் அரசின் திட்டங்கள், மக்களை தலை நிமிர வைப்பதற்கு பதிலாக, மகளிர் உரிமைத்தொகை, காலை உணவு உள்ளிட்ட அரசின் திட்டங்களை சுட்டிக்காட்டி மக்களை கையேந்த வைத்துள்ளதாக சாடினார்.