நெல் கொள்முதல் ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு இவ்வளவு உயர்த்த வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!

நெல் கொள்முதல் ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு இவ்வளவு உயர்த்த வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!
Published on
Updated on
1 min read

நெல் கொள்முதல் ஊக்கத் தொகையை குவிண்டால் ஒன்றுக்கு 500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

நெல் கொள்முதல் ஊக்கத் தொகையை குவிண்டால் ஒன்றுக்கு 500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ”தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் வழக்கமாகத் தொடங்கும் அக்டோபர் ஒன்றாம் நாளுக்கு பதிலாக, செப்டம்பர் ஒன்றாம் நாளே தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை அறுவடை முன்கூட்டியே தொடங்கிவிட்ட நிலையில், அந்த நெல்லுக்கு உயர்த்தப்பட்ட விலை கிடைப்பதற்கு வசதியாக நெல் கொள்முதலை செப்டம்பர் மாதமே தொடங்கும்படி பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்த நிலையில், அதன்படியே  கொள்முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டவர், இதன்மூலம் முன்கூட்டியே அறுவடை முடித்த உழவர்கள் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு தடை விதித்துள்ளதால் உலகம் முழுவதும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் நெல் சாகுபடியை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நெல் கொள்முதல் விலையை அதிகரிப்பதன்மூலம் மட்டுமே இதனை சாதிக்க முடியும் என தெரிவித்துள்ள அன்புமணி, குவிண்டால் ஒன்றுக்கு 7 ரூபாய் உயர்த்துவது போதுமானது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, நெல் கொள்முதல் ஊக்கத் தொகையை குவிண்டால் ஒன்றுக்கு 500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com