"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதாரமின்றி பேசமாட்டார்" - வைகோ

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதாரமின்றி பேசமாட்டார்" - வைகோ

பிரதமர் மோடி அரசின் ஊழல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதாரம் இல்லாமல் பேச மாட்டார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

மதுரை வலையங்குளம் தனியார் கல்லூரி மைதானத்தில் மதிமுக சார்பில் செப்டம்பர் 15-ந் தேதி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை ஆய்வு செய்வதற்காக வருகை தந்த வைகோ, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையும் படிக்க : ”விளையாட்டில் சிறந்து விளங்கி இந்தியாவுக்கு பெருமை சேருங்கள்" மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை!

அப்போது பேசிய அவரிடம், முதலமைச்சர் ஸ்டாலின் சிஏஜி அறிக்கையின்படி, மோடி அரசு பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், முதலமைச்சர் ஆதாரம் இல்லாமல் பேசமாட்டார், தகுந்த ஆதாரம் இருப்பதால் தான் மோடி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு குறித்து பேசியிருப்பதாக கூறியுள்ளார்.