அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் எங்கே....?!

அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் எங்கே....?!

Published on

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா எப்போதெல்லாம் குனிந்ததோ, அப்போதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்ததாக கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மாற்றிய பேனா:

சென்னை கொரட்டூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் மகனின் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.  தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர், வள்ளுவர் கோட்டம், டைட்டில் பார்க்கை உருவாக்கிய, குடிசைகளை அடுக்குமாடிக் குடியிருப்புகளாக்கிய, தமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தையே மாற்றிய பேனா, கலைஞரின் பேனா என குறிப்பிட்டு பேசியுள்ளார். 

வாய் திறக்காமல்:

சேதுசமுத்திரத் திட்டம் தொடர்பாக பிரதமர் வாய்திறக்க மறுப்பதாகவும், கருப்பு பணத்தை மீட்டு மக்களின் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி என்னவாயிற்று எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.  தமிழ்நாடு எய்ம்ஸ் கட்டுமானத்திற்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com