புதுச்சேரியில் தொடங்கிய கண்கவர் மலர் கண்காட்சி....

புதுச்சேரியில் தொடங்கிய கண்கவர் மலர் கண்காட்சி....
Published on
Updated on
2 min read

புதுச்சேரி வேளாண்துறை சார்பில் ரோடியர் திடலில் இன்று முதல் மலர், காய் கனி கண்காட்சி தொடங்குகிறது.  துணை நிலை ஆளுநர், முதலமைச்சர் பங்கேற்று துவக்கி வைத்துள்ளனர்.

தொடங்கிய கண்காட்சி:

புதுச்சேரியில் வேளாண் துறை சார்பில் ஆண்டுதோறும் மலர், காய், கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி இந்த ஆண்டுக்கான மலர், காய்கனி கண்காட்சி இன்று ரோடியர் மில் திடலில் தொடங்கியது.  இதனை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு பலூன்களை பறக்க விட்டும் ரிப்பன் வெட்டியும் துவக்கி வைத்தனர்.

புதிய ரக செடிகள்:

இந்த மலர் கண்காட்சியில் புதுச்சேரி அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் உருவாக்கப்பட்ட 33 ஆயிரம் மலர் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.  இதில் கசேனியா, டைலார்டியா, பொரேனியா, டெர்பினா, ஸ்நாப்டிராகன், செலோசியா, சால்வியா, பெட்டுனியா என புதிய ரக பூஞ்செடிகளும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. 

பூக்களாலான உருவங்கள்:

கண்காட்சியை காண வரும் பார்வையாளர்களை கவரும் விதமாக வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்களால் செய்யப்பட்ட யானை, பெங்குயின், மயில் , சிறு தானியங்களால் உருவாக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம், பாகற்காய் கொண்டு உருவாக்கப்பட்ட டைனோசர், சுரைக்காய் கொண்டு அன்னபறவை, அண்ணாச்சி பழம் கொண்டு உருவாக்கப்பட்ட முதலை, திராட்சை பழம் கொண்டு உருவாக்கப்பட்ட மாடு போன்றவைகள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு வைக்கப்பட்டு  உள்ளது.  

கவரும் வகையில்:

இது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிககளை கவரும் வகையில் உள்ளது.  இந்த கண்காட்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com