உண்டியலில் பணம் போட வேண்டாம்... விராலிமலை கோவில் நிர்வாகங்கள் அறிவிப்பு...

விராலிமலையில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
உண்டியலில் பணம் போட வேண்டாம்... விராலிமலை கோவில் நிர்வாகங்கள் அறிவிப்பு...
Published on
Updated on
1 min read

விராலிமலை அருகே உள்ள விராலூரில் பிரசித்திபெற்ற பூமீஸ்வரர் சிவன்கோவில் உள்ளது. மிகப்பழமை வாய்ந்த இக்கோவிலில் வருடம்தோரும் ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேக விழாவானது வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் இன்று காலை பூமீஸ்வரருக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றது.

கோவில் மண்டபத்தில் பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடினர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்.

கோவிலில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் ஒரு அறிவிப்பு தந்தது. பூஜையில் கலந்து கொண்டு காணிக்கை செலுத்தும் பக்தர்கள் உண்டியலிலோ அல்லது தட்டிலோ செலுத்த வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக கோவிலுக்கு நன்கொடையாக மரக்கன்றுகள் அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

தற்போது இவர்கள் அறிவித்த அறிவிப்பானது பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இதேபோல் விராலிமலை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள வன்னி மரத்தடியில் இருக்கும் சிவன் ஆலயத்திலும் அன்னாபிஷேக விழாவானது வெகு விமர்சியாக நடைபெற்றது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com