கிரகணத்தால் அடைக்கப்பட்ட திருப்பதி கோவில் நடை ...!

கிரகணத்தால் அடைக்கப்பட்ட திருப்பதி கோவில் நடை ...!

சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை காலை 8.40 மணிக்கு அடைக்கப்பட்டது. 

இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணம் இன்று நடைபெற உள்ளது. சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்கும் போது பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதே சந்திர கிரகணம். இந்திய நேரப்படி, சந்திரகிரகணம் இன்று மதியம் 2:39 மணி முதல் மாலை 6:19 மணி வரை நடைபெற உள்ளது. அடுத்த முழு சந்திர கிரகணமானது 2023, அக்டோபர் மாதம் நிகழ இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல்வேறு கோவில்களும் அடைக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை காலை 8.40 மணிக்கு அடைக்கப்பட்டது. இந்நிலையில் இரவு 7.20 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகத்தரப்பில் கூறப்பட்டுள்ளது. கிரகணத்தையொட்டி கட்டண சேவைகள், இலவச தரினம் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அன்னதான கூடங்களும், மலையில் உள்ள ஹோட்டல்களும் மூடப்பட்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஓபிஎஸ் வெளியிடப்போகும் உண்மை என்ன? வெளிவந்தால் எடப்பாடிக்கு அவமானமா?