நிகழ்ச்சி மேடையில் மயங்கிய மத்திய போக்குவரத்து துறை அமைச்சர்...காரணம் என்ன?!!

நிகழ்ச்சி மேடையில் மயங்கிய மத்திய போக்குவரத்து துறை அமைச்சர்...காரணம் என்ன?!!

Published on

நிகழ்ச்சி முடிந்ததும் நிதின் கட்காரி உடல்நல குறைவாக இருப்பதாக கூறப்பட்டது.  மருத்துவர்கள் உடனடியாக அவரை மேடைக்குப் பின் அழைத்துச் சென்றனர்.  மருந்து சாப்பிட்டு சிறிது நேர ஓய்விற்கு பிறகு நலம் பெற்றார். 

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் குணமடைந்து காரில் வீடு திரும்பினார். 

பாஜக எம்எல்ஏ நீரஜ் ஜிம்பா கூறுகையில், நிகழ்ச்சி முடிந்ததும் கட்காரி உடல்நலக் குறைவாக இருப்பதாக தெரிவித்தார்.  மருத்துவர்கள் உடனடியாக அவரை மேடைக்குப் பின் அழைத்துச் சென்று மருந்து அளித்த சிறிது நேரத்தில் உடல்நலம் பெற்றார். 

மத்திய அமைச்சரின் உடல்நிலை குறித்த விரிவான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. கட்காரி சில நாட்களாகவே வங்காளத்தில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  வடக்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியில் ரூ.1206 கோடி மதிப்பிலான மூன்று தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் நிதின் கட்காரி.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com