திருச்சியில் பரபரப்பு: ஸ்ரீரங்கம் கோவிலில் கோபுர சுவர் இடிந்து விழுந்து விபத்து...!

திருச்சியில் பரபரப்பு: ஸ்ரீரங்கம் கோவிலில் கோபுர சுவர் இடிந்து விழுந்து விபத்து...!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் கிழக்கு கோபுர சுவர் நள்ளிரவில் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம்  அரங்கநாதர் சுவாமி திருக்கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் ராஜ கோபுரம், வெள்ளை கோபுரம், ரங்கா ரங்கா கோபுரம் உள்ளிட்ட பெரிய கோபுரங்களும், கோவிலை சுற்றி சிறிய சிறிய கோபுரங்கள் என 21 கோபுரங்கள் உள்ளது. 

இதையும் படிக்க : விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்!

கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருக்கும் கோபுரத்தில் முதல் மற்றும் இரண்டாவது அடுக்குகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டதால் அவை உடைந்து விழாமல் இருக்க கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விரிசல்களை சரி செய்ய கோயில் நிர்வாகமே பணிகள் மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1.50 மணி அளவில் முதல் நிலையில் இருக்கும் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் கோபுரத்தில் இருந்த சிற்பங்கள் அருகில் இருந்த மின்மாற்றிகள் மீது விழுந்தன. அந்த சமயம், மக்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. தற்பொழுது அந்த பகுதியில் பொதுமக்கள் செல்லாமல் இருக்க பேரிக்காடுகளைக் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.