தஞ்சாவூரில் வாகன தணிக்கையின்போது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் காவல் நிலைய தலைமைக் காவலர் பழனிவேல் குருங்களூர் வெண்ணாற்றுப் பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் தலைமைக் காவலர் மீது மோதிய விபத்தில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையும் படிக்க : ஆடித்திருவிழா: 1208 குத்து விளக்கு ஏற்றி பூஜை!
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இருசக்கர வாகனம் மோதி தலைமைக் காவலர் உயிரிழந்த செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாகவும், உயிரிழந்த தலைமைக் காவலர் பழனிவேலின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.