நாட்டின் பழங்கால வரலாற்று மற்றும் கலாச்சார மத இடங்களின் அசல் பெயர்களைக் கண்டறிய ஆணையத்தை அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மனு:
மனுவில் நாட்டின் வரலாற்று மற்றும் கலாச்சார மத இடங்களின் அசல் பெயர்களைக் கண்டறியவும், ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்களை அவற்றின் தற்போதைய பெயர்களில் இருந்து நீக்கவும் பெயரிடும் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய பெயர்களை வெளியிட தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை:
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளுக்கு இது புதுவழியை அளிக்கும் என்று கூறிய உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பை வழங்கும் போது, நாட்டின் வரலாற்றை அதன் தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினர் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது
தீர்ப்பு:
மேலும் இந்து என்பது ஒரு மதம் அல்ல எனவும் அது ஒரு வாழ்க்கை முறை எனவும் கூறியுள்ளது. தொடர்ந்து இந்த மதத்தில் மதவெறி இல்லை எனவும் எதிரிகளை மட்டுமே உருவாக்கும் கடந்த காலத்தை தோண்டி எடுக்காதீர்கள் எனத் தெரிவித்ததோடு மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.
-நப்பசலையார்