பெண்களை பள்ளிக்கு அனுப்புவதைத் தடுக்க விஷம் கொடுக்கப்பட்ட மாணவிகள்!!!

பெண்களை பள்ளிக்கு அனுப்புவதைத் தடுக்க விஷம் கொடுக்கப்பட்ட மாணவிகள்!!!

புனித நகரமான கோம் உட்பட பல இடங்களில் உள்ள பெண்கள் பள்ளிகளை மூடுவதற்கு நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு சிலர் விஷம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

ஈரானில் ஒரு பயங்கரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான சிறுமிகளுக்கு விஷம் கொடுத்த சம்பவம் ஈரானில் உள்ள நகரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  இதனை ஈரானிய அமைச்சர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

ஈரானின் துணை சுகாதார அமைச்சர் யூனுஸ் பனாஹி இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானிய உள்ளூர் ஊடகங்களின்படி, கோமில் உள்ள பள்ளிகளில் பல மாணவிகள் விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.  அனைத்துப் பள்ளிகளும், குறிப்பாக பெண்கள் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என சிலர் விரும்பியதாக தெரிகிறது.  ஈரானின் அமைச்சர் பனாஹி இந்த விவகாரத்தில் கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தற்போது ஈரான் அரசு இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. 

ஈரானின் நான்கு நகரங்களில் உள்ள 14 பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் குறிப்பாக குறிவைக்கப்பட்டுள்ளனர்.  வடமேற்கு நகரம் ஆர்டெபில், தலைநகர் தெஹ்ரான், மேற்கு நகரம் போரோசார்ட் மற்றும் கோம் நகரம் ஆகியவை இதில் அடங்கும்.  விஷம் கொடுக்கப்பட்ட மாணவிகளின் நிலை என்ன என்பதைக் குறைத்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.  கோம் நகரம் ஈரானின் புனித நகரமாகக் கருதப்படுவதோடு மிகவும் பழமைவாத மற்றும் மத வெறி கொண்ட நகரமாக கருதப்படுகிறது. 

சமீபத்தில் ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் நாடு முழுவதும் பரவி உலகம் முழுவதும் ஆதரவைப் பெற்றபோது 22 வயதான மஹ்சா அமினி போலீஸ் காவலில் இறந்ததையடுத்து போராட்டங்கள் வலுப்பெற்றன.  இந்தப் போராட்டங்களில் பாதுகாப்புப் படையினரால் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், நான்கு போராட்டக்காரர்கள் தூக்கிலிடப்பட்டதோடு ஆயிரக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   வெங்காயாம் விலை வீழ்ச்சி... கோபமடைந்த விவசாயிகள்!!!