”இது இந்தியர்களின் நிலம்.  துரத்திய பின்னரே இறக்கும்” சீனாவிற்கு இந்திய வீரர்களின் பதிலடி...அன்று முதல் இன்று வரை!!!

”இது இந்தியர்களின் நிலம்.  துரத்திய பின்னரே இறக்கும்” சீனாவிற்கு இந்திய வீரர்களின் பதிலடி...அன்று முதல் இன்று வரை!!!
Published on
Updated on
2 min read

சீனாவுடனான இந்தியாவின் மொத்த எல்லைப் பகிர்வு 3,488 கி.மீ.   இந்த எல்லைப் பகுதிகளில் சீனாவின் அத்துமீறிய ஊடுருவல்கள் அடிக்கடி நடந்துள்ளன.  ஆனால் பெரும்பாலான ஊடுருவல்கள் சீனாவிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான லடாக் மற்றும் அருணாச்சலப் பகுதிகளில் நிகழ்ந்துள்ளன.

தப்பியோடிய வீரர்கள்:

தவாங் பிராந்தியத்தில் யாங்சே போர்முனையில் சீனத் துருப்புக்கள் நடத்திய மறைமுகத் தாக்குதலை முறியடித்ததன் மூலம் சீனாவிற்கு பெரும் பதிலடியை தந்துள்ளது இந்தியா ராணுவம்.  சீனாவின் ராணுவ வீரர்கள் தப்பியோடிய வீடியோக்கள் உலகம் முழுவதும் தற்போது வைரலாகி வருகின்றன.  சீனாவின் அதிபராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஜி ஜின்பிங்கின் கௌரவத்திற்கு இது ஒரு பெரிய அடியாகும்.

ஆனால் இராணுவ வல்லுநர்கள் கூற்றுப்படி, இந்த சம்பவம் வரையறுக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.  மேலும் இந்தத் தாக்குதல்களின் அதிகரிப்பு இனி இந்தியாவை ஆச்சரியப்படுத்தாது.  ஏனெனில் அதிக பலத்துடன் இந்தியா அவர்களை முறியடிப்பதைக் கண்டு சீனா ஆச்சரியமடைந்துள்ளது. 

தொடரும் எல்லை தகராறு:

சீனாவுடனான இந்தியாவின் மொத்த எல்லை பகிர்வு 3,488 கி.மீ.  இந்த எல்லைப் பகுதிகளில் சீனாவின் ஊடுருவல்கள் அடிக்கடி நடந்துள்ளன.  ஆனால் பெரும்பாலான சம்பவங்கள் சீனாவிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான லடாக் மற்றும் அருணாச்சலப் பகுதிகளிலேயே நிகழ்ந்துள்ளன. சீனாவுடனான எல்லை தகராறு 1962 முதல் பல கட்டங்களைக் கடந்து தற்போது வரை நீண்டு வருகிறது. 

ஆக்கிரமிப்பு ஊடுருவல்கள்:

மார்ச் 2013 இல் ஜி ஜின்பிங் ஆட்சிக்கு வந்த பிறகு, நிலைமை மேலும் மோசமான முறையில் மாறியது.  அதாவது சீனா அதனுடைய முந்தைய ஒப்பந்தங்களை உடைத்து ஆக்கிரமிப்பு ஊடுருவல்களை மேலும் அதிக அளவில் அதிகரித்தது.  ஜி ஜின்பிங்கிற்கு முன்பிலிருந்தே இந்தியா சீனா எல்லைப் பகுதியில் பல சர்ச்சைகள் இருந்தன.  ஆனால் ஜின்பிங் அதற்கான தீர்வை வழங்க விரும்பினார்.  1967 ஆம் ஆண்டில், சும்பி பள்ளத்தாக்கில் இந்தியா சீனாவை பெரிதும் காயப்படுத்தியது.  அதன் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக, 1967 முதல் 2020 வரையிலான 53 ஆண்டுகளில் இந்தியா மற்றும் சீன வீரர்களுக்கு இடையே எவ்வித தாக்குதலையும் நடத்தவில்லை.   

1993-ம் ஆண்டு அப்போதைய சீன அதிபர் ஹூ ஜின்டாவோவுடன் எல்லைப் பிரச்னை தொடர்பான ஒப்பந்தத்தில், எல்லையில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட மாட்டாது என்று விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதனுடன் அதிக எண்ணிக்கையில் படைகளை அனுப்புவது இருக்காது எனவும் ஏதேனும் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அது முன்கூட்டியே அறிவிக்கப்படும் எனவும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.  மேலும் 1999 கார்கில் போரின் போது, ​​சீனா பாகிஸ்தானை ஆதரிக்காமல், வாய்மூடி பார்வையாளராகவே இருந்தது என்பதும் இங்கு குறிப்பிட்டு கூறத்தக்கது. 

எதிர்க்கும் இந்தியா:

இந்தியா அடிபணிந்து போகாமல் இருமடங்கு பலத்துடன் சீனாவை எதிர்கொள்கிறது என்ற உண்மையை சீனாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.  இந்தியாவின் இராணுவத்திற்கு அதிகாரமளித்தல், எல்லையில் சீரற்ற பகுதிகளில் சாலைகள் அமைப்பது, அருணாச்சலத்திலிருந்து உத்தரகாண்ட் மற்றும் பாய்கா வரை விமானப் படையை அனுப்புதல், புதிய போர் விமானங்கள் மற்றும் இந்தியாவின் குவாட் அமைப்பு கூட்டணி இவற்றையெல்லாம் பார்த்து சீனாவிற்கு அச்சம் எழுந்து விட்டதாகவே தோன்றுகிறது.  

இந்தோ-பசிபிக் என்ற பெயரே சீனாவைக் கண்கலங்க வைக்கிறது போலும்.  வியட்நாம், ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மர் மற்றும் ஆசியான் நாடுகளுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் உறவுகள் சீனாவின் எல்லை விரிவாக்க கனவை சிதைத்து வருகிறது.  அண்டை நாடான இந்தியா வல்லரசாக உருவெடுத்து வருவதை சீனா விரும்பவில்லை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

சீனாவின் துருப்பு சீட்டுகள்:

ஒருபுறம் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள பொருளாதாரச் சிக்கலை செரிசெய்ய விளைவதாக காட்டிக் கொண்டு அந்த நாடுகளின் மீது தனது அதிகாரத்தை செலுத்தி, , மறுபுறம் எல்லை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அதிகரித்து இந்தியாவைச் சுற்றி வளைக்க சதி செய்கிறது சீனா.  இது விரைவில் முடிய போவதில்லை. இதற்கான பயணம் நெடியது.  இந்தியாவின் பலவீனத்திறகாக காத்து கொண்டிருக்கிறது சீனா.  ஒரு சிறிய தவறு கூட இந்தியாவின் நிலையை மொத்தமாக மாற்றி விடும்.  

வீரர்களின் உறுதி:

”எவ்வளவு நீண்ட மற்றும் கடினமான சண்டையாக இருந்தாலும், எதிரியை புனிதமான நிலத்திற்கு நுழைய அனுமதிக்க மாட்டோம்” என்ற இந்திய குடிமக்களின் உறுதியை இந்த பாராளுமன்றம் மீண்டும் வலியுறுத்துகிறது.  ”இது இந்தியர்களின் நிலம்.  துரத்திய பின்னரே இறக்கும்.”  இன்றும் கூட, இந்தத் தீர்மானம் இந்திய வீரர்கள் மற்றும் தேசபக்தியுள்ள மக்களை வலிமை மற்றும் நம்பிக்கையின் இழைகளால் பின்னி பிணைக்கிறது.

 -நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com