கோரிக்கைக்கு கிடைத்த பரிசு...ரயிலுக்கு அமைச்சர் மலர்தூவி வரவேற்பு...!

Published on: 
Updated on: 
1 min read

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ரயில் நிலையத்தில் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட புதுச்சேரி சென்னை ரயிலை அமைச்சர் செஞ்சி மஸ்தான், விஷ்ணுபிரசாத் எம்.பி ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். 

திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தினமும் நூற்றுக்கணக்கானோர் சென்னைக்கு பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர்.

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில், மயிலம் ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரயில்வே நிர்வாகம், புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் ரயில், மயிலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிட்டது. அதன்படி, மயிலம் நிலையத்தில் இன்று காலை நிறுத்தப்பட்ட ரயிலை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத்  வரவேற்று கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com