சென்னை மக்கள் கவனத்திற்கு...திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம்!!

இந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு வழங்கப்பட உள்ள திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. 

திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தில் தமிழக பக்தர்களின் சார்பில் இந்து தர்மார்த்த சமிதி, 11 வெண்பட்டு குடைகளை ஏழுமலையானுக்கு கடந்த 18 ஆண்டுகளாக சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான, திருப்பதி திருக்குடைகள் உபய உற்சவம் தொடக்க விழா சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் தொடங்குகிறது.

சென்னை கேசவ பெருமாள் கோவிலில் இருந்து நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க 11 வெண்பட்டு குடைகளும் ஊர்வலமாக மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக பூக்கடை பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் 11 குடைகள் ஆடி அசைந்து பக்தர்களுக்கு காட்சி தர உள்ளது. இவை தவிர பெருமாளின் பொற்பாதங்கள், தசாவதார உற்சவர் சிலைகள், ஸ்ரீதேவி பூதேவி சமேத வேங்கடேச பெருமாள் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பவனி வர உள்ளன. ஊர்வலம் செல்லும் பாதை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருமலை திருப்பதி குடை ஊர்வலம் காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்களை போலீசார் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க || விரைவில் படுக்கை வசதிகளுடன் வந்தே பாரத்!!