இந்தியா VS ஜப்பான்: விறுவிறுப்பான போட்டியை சமனில் முடித்த இந்தியா!

இந்தியா VS ஜப்பான்: விறுவிறுப்பான போட்டியை சமனில் முடித்த இந்தியா!
Published on
Updated on
1 min read

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா - ஜப்பான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. இரண்டாவது நாளான நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் கொரியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் பாகிஸ்தான் அணி முதல் கோல் அடித்து முன்னிலை வகித்தது. இருப்பினும் 2ஆம் பாதியில் கொரியா அணி விடவில்லை. பதிலுக்கு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்று சமன் செய்தது.

2வது போட்டியில் மலேசியா - சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மலேசிய அணி சீனாவை 5-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. 

இதை தொடர்ந்து நடைபெற்ற 3வது போட்டியில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது. ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ஜப்பான் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் 43வது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்தது. இறுதி வரை இரு அணிகளும் அடுத்த கோல் போடாததால் 1-1 என்ற கணக்கில் போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com