தமிழ்நாட்டில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசின் முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராகவும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் சென்னை தலைமையக ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : ராகுல்காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு... வழக்கு கடந்து வந்த பாதை!!
அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் டிஜஜி பகலவன், திருச்சிக்கும், திருச்சி காவல் ஆணையர் சத்யப்பிரியா, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாகவும், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு மண்டல ஐஜி சுதாகர், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராகவும்,. மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய ராஜீவ் குமார், சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் காவல் ஆணையராக காமினி, மதுரை காவல் ஆணையராக லோகநாதன் உள்ளிட்ட 27 பேர் இடமாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளனர்.