அவையை விட்டு வேகமாக வெளியேறிய ஆளுநர்.... காரணம் யார்?!!

அவையை விட்டு வேகமாக வெளியேறிய ஆளுநர்.... காரணம் யார்?!!

 2023ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.  முதல் நாளான இன்று ஆளுநர் ஆர்.என். ரவி அவரது உரையுடன் கூட்டத்தொடரை தொடங்கியுள்ளார். 

சர்ச்சைகள்:

தற்போது ஆளுநர் - 'தமிழ்நாடு' பெயர் சர்ச்சை போய்க்கொண்டிருக்கும் சூழலில் ஆளுநரின் உரை மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.  அதிமுக, பாஜக போன்ற எதிர்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை அவையில் எழுப்ப காத்திருக்கும் என்பதால் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உரையில் ஆளுநரே இரண்டு முறை தமிழ்நாடு என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆளுநர் உரை முடிந்தவுடன், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் வாசிப்பார். அதன்பிறகு சபாநாயகர் அப்பாவு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களை முடிவு செய்து அறிவிப்பார். இத்துடன் இன்றைய கூட்டத்தொடர் நிறைவுபெறும். 

முதல் சட்டசபை கூட்டம்:

அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

மெட்ரோவில் செல்கிறாரா ஆளுநர்...?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையை முடித்த ஆளுநர் ஆர்.என். ரவி, மெட்ரோ ரயில் மூலம் ராஜ் பவன் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ஆளுநர் உரை:

"வரப்புயர நீருயரும் 
நீருயர நெல் உயரும்
நெல்லுயரக் குடி உயரும் 
குடி உயரக் கோல்உயரும் 
கோல்உயரக் கோன்உயர்வான்"  என்ற ஒளவையின் முதுமொழியுடன் உரையை தொடங்கினார் ஆளுநர்.  தமிழ்நாடு அரசின் முக்கிய செயல்பாடுகள் குறித்தும் வாசித்தார் ஆளுநர் ரவி.

திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு:

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிகட்சிகள் கோஷங்களை எழுப்பிய படி சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.  ஆன்லைன் ரம்மி மசோதா ஒப்புதல் வழங்காத ஆளுநரை கண்டித்து கோஷமிட்டதுடன் 'ஆர்எஸ்எஸ் பாஜக கொள்கையை திணிக்காதே' என்று முழக்கமிட்டு வெளி நடப்பு செய்தனர்.

ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை உறுப்பினர்கள் தொடர்ந்து ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

ஆளுநரே வெளியேறு:

ஆளுநர் ஆர்.என். ரவி தமிழில் உரையாற்ற தொடங்கியதும் 'ஆளுநரே வெளியேறு' என சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்தனர்.

வெளியேறிய ஆளுநர்:

சட்டபேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் சில விமர்சனங்களை தெரிவித்த போது அவையிலிருந்து வேகமாக வெளியேறினார் ஆளுநர் ஆர். என். ரவி.

காரணம் என்ன?:

அரசு தயாரித்த உரையை முறையாக படிக்கவில்லை எனவும் ஆளுநர் சொந்தமாக கூறிய வார்த்தைகள் அவை குறிப்பில் இடம்பெறாது எனவும் முதலமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து ஆளுநர் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ஜி-20ன் முதலாவது மாநாடு.... நிதி சேர்க்கை மாநாடு...