ஜி-20ன் முதலாவது மாநாடு.... நிதி சேர்க்கை மாநாடு...

ஜி-20ன் முதலாவது மாநாடு.... நிதி சேர்க்கை மாநாடு...
Published on
Updated on
1 min read

ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமைப்பின் உறுப்பு நாடுகளில் இருந்து பல பிரதிநிதிகள் கொல்கத்தா வந்தடைந்துள்ளனர். 

முதல் கூட்டம்:

இந்தியாவின் தலைமையில் ஜி-20 மாநாட்டின் முதல் கூட்டம் கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. ஜனவரி 9 முதல் 11 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் நிதிச் சேர்க்கைக்கான உலகளாவிய கூட்டாண்மை குறித்து முடிவு செய்வார்கள். 

கொல்கத்தாவில்..:

ஜி-20ன் நிதி தொடர்பான கொல்கத்தா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமைப்பின் உறுப்பு நாடுகளில் இருந்து பல பிரதிநிதிகள் கொல்கத்தா வந்தடைந்துள்ளனர்.  கொல்கத்தாவின் நியூடவுனில் உள்ள விஷ்வா பங்களா மாநாட்டு மையத்தில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வரவேற்பு:

’மகிழ்ச்சியின் நகரம்’ என்று அழைக்கப்படும் கொல்கத்தா கூட்டத்திற்காக ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.  விருந்தினர்களை வரவேற்க விமான நிலையத்தில் இருந்து  சிறப்பு ஃப்ளெக்ஸ் மற்றும் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.  கொல்கத்தாவின் விக்டோரியா மெமோரியல், இந்தியா மியூசியம், ஹவுரா பாலம், தாகுர்பாரி உள்ளிட்ட அனைத்து முக்கிய சுற்றுலா இடங்களும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.  வெளிநாட்டு விருந்தினர்களுக்கு இது ஒரு சுற்றுப்பயணமாக அமையும்.

எதைக்குறித்து?: 

வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த கூட்டத்தில் நிதி உள்ளடக்கம், உறுப்பு நாடுகளின் நிதி அமைப்பின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், நிதி பரிமாற்றத்தை எளிதாக்குதல், நிதி கல்வியறிவு மற்றும் டிஜிட்டல் நிதி கல்வியறிவு மற்றும் உறுப்பினர்களிடையே இடைவெளியைக் குறைப்பது போன்ற முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றன.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com