மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில், பணிநேரம் முடிந்தவுடன் please go home எனக்கூறி அணைந்துவிடும் வகையில் கம்ப்யூட்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தூரில் செயல்பட்டுவரும், மொபைல் பயன்பாட்டு மேம்பாட்டு நிறுவனத்தில் பணியாளர்கள் நலனில் அக்கறை காட்டும் விதமாக புது வித கணினி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது சில நேரங்களில் பணிநேரம் முடிந்த பிறகும் வேலைநேரம் முடிந்தவுடன் அதிக வேலை காரணமாக வேலையை தொடர்ந்து செய்யும் நிலை உள்ளது.
இதை மாற்றும் விதமாக குறிப்பிட்ட நிறுவனம் பணியாளர்களின் பணிநேரம் முடிந்தவுடன் 10 நிமிடத்தில் சிஸ்டம் Please Go Home எனக் கூறி அணைந்துவிடும். அதாவது விரைவில் வீட்டுக்குச் செல்லுங்கள் என தெரிவிக்கும் வகையில் இந்த வகையில் கம்ப்யூட்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஊழியர்களின் அதிகப்படியான வேலைப்பளுவை குறைக்க இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் கோலானி தெரிவித்துள்ளார்.