திடீர் ஆய்வு நடத்திய தலைமை செயலாளர்.... எதற்காக?!!

திடீர் ஆய்வு நடத்திய தலைமை செயலாளர்.... எதற்காக?!!
Published on
Updated on
1 min read

முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கும் புகார்கள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

திடீர் ஆய்வு:

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு  அலுவலகம் உள்ளது.  இங்கு தமிழ்நாடு  முழுவதும் இருந்து பல்வேறு புகார்கள், கோரிக்கைகள்  அளிக்க பொதுமக்கள் வருவார்கள்.  இந்த நிலையில் முதலமைச்சர் தனிப் பிரிவில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு நடத்தினார்.

வசதிகள் குறித்து: 

அப்போது பெறப்படும் மனுக்கள் குறித்தும், மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து  அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  அதோடு, புகார் அளிக்க வருபவர்களுக்கு எவ்வாறான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதெல்லாம் கேட்டதோடு, புகார்கள் மீது எவ்வளவு நாட்களுக்குள் நடவடிக்கைகள்  எடுக்கபடுகிறது என்பதையும் ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து, தலைமைச் செயலகம் எதிரில் அமைக்கப்பட்டு வரும் புதிய வாகன நிறுத்தும் இடத்தையும் தலைமைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com