மதுரை ரயில் விபத்தில் உயிாிழந்த 9 பேரின் உடல்கள் சென்னை வந்தது...!

மதுரை ரயில் விபத்தில் உயிாிழந்த 9 பேரின் உடல்கள் சென்னை வந்தது...!
Published on
Updated on
1 min read

மதுரை ரயில் விபத்தில் உயிாிழந்த 9 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

உத்தரபிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு கடந்த 17-ம் தேதி தமிழ்நாடு வந்தடைந்த சுற்றுலா ரெயில், மதுரை போடி லைன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் பயணம் செய்த லக்னோவைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் சமையல் செய்வதற்காக விதிமுறைகளுக்கு மாறாக கியாஸ் சிலிண்டா் கொண்டு வந்துள்ளனா்.

அப்போது அவா்கள் தேநீா் போடுவதற்காக கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்தபோது எதிா்பாராதவிதமாக சிலிண்டா் வெடித்து ரயில் தீப்பற்றி எாிந்தது. இதில் பரமேஸ்வர் தயால் குப்தா, மிதிலேஷ் குமாரி, ஹேமானி பன்ஷால், சாந்தி தேவி வர்மா உள்ளிட்ட 9 போ் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிாிழந்தனா். 

உயிரிழந்த 9 போின் உடல்களும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பாிசோதனை செய்யப்பட்டு, அவா்களது வலது பக்க தொடை எலும்புகள் தனியாக எடுக்கப்பட்டு, ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  

இதனையடுத்து பிரேத பாிசோதனை செய்யப்பட்ட 9 போின் உடல்களுக்கும் அமைச்சா்கள் மூா்த்தி, பிடிஆா் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட பலா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து 9 போின் உடல்களும் அமரா் ஊர்தி மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னையில் இருந்து இன்று அவா்களது உடல்கள் விமானம் மூலம் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com