சோறு என்ற சொல்லை தமிழனுக்கு நா கூசுகிறது...ஆனால் ஆங்கில வார்த்தையை சொல்ல நா இனிக்கிறது!

சோறு என்ற சொல்லை தமிழனுக்கு நா கூசுகிறது...ஆனால் ஆங்கில வார்த்தையை சொல்ல நா இனிக்கிறது!

தாய் கற்றுக்கொடுத்த சோறு என்ற சொல்லைக் கூட தமிழர்கள் இப்போது பயன்படுத்துவதில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமாதஸ் தமிழ் குறித்து தந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடா? தமிழகமா? சர்ச்சை:

கடந்த சில தினங்களாகவே தமிழ்நாடா? தமிழகமா? என்ற கருத்து தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ் சொல்லை பயன்படுத்த தமிழர்களே யோசிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு ஒரு அறிவுப்பு...! சென்னையில் இன்று முதல் கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கம்...!

இராமதாஸ் ட்வீட் :

அதில், ”தாய் கற்றுக்கொடுத்த சோறு என்ற சொல்லைக் கூட தமிழர்கள் இப்போது பயன்படுத்துவதில்லை. அந்த சொல்லை சொல்ல தமிழனுக்கு நா கூசுகிறது.  ஆனால், ரைஸ் (Rice) என்ற ஆங்கிலச் சொல்லை சொல்வதற்கு நா இனிக்கிறது!” என்று தமிழ் குறித்து டாக்டர் இராமதாஸ் பதிவிட்டுள்ளார்.