பாலியல் வழக்குகள் தொடர்பான விசாரணை விதிகளை மாற்றியமைக்க நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் மற்றும் அறிக்கையை ரகசியமாக வைத்திருப்பது குறித்து உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளது.
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றப்பத்திரிக்கை அல்லது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 164ன் கீழ் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் அறிக்கையை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மனு மீதான விசாரணையின் போது தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு இதனைத் தெரிவித்துள்ளது. இதுபோன்ற வழக்குகள் தொடர்பான விசாரணை விதிகளை உடனடியாக திருத்துமாறு நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.